Sunday, May 27, 2012

ஒரு தந்தையின் காதல் கதை




இன்று இன்பமாய்  இயங்கிக்கொண்டிருக்கும்
என் இல்லறத்தில் முன் ஏற்பட்ட இன்னல்கள்
உனக்கு தெரியுமா? மகனே !!!!

உன் தாயின் தாவணி தலைப்பை கண்டு
கண்விழித்த காலம் தொட்டு, சென்ற
பாதையும் கொண்ட துன்பங்களும்
கொஞ்சமல்ல மகனே!!!!

வீட்டைச்சுற்றி காவலோடு, தெருவுக்கொரு
நோட்டதோடு சுற்றி வந்த உனது
அன்னையை என்னை திரும்பி பார்க்க
வைக்க பல வருடங்களை கடந்தேன்.

தென்னைமரமென்ன பனைமரமென்ன
ஏறியதோடு எட்டிப்பார்த்த காலமும் உண்டு!!!
தொட்ட கைகள் வெட்டப்படும்
பார்த்த கண்கள் தோண்டப்படும்
வீட்டிலும் ரோட்டிலும் ரோந்து
ஆட்களுடன் அவள் செல்லும்
எழில் காண என் இரு கண்கள்
ஏங்கிய கதையென்ன சொல்ல மகனே!!!
அவள் பார்வை திரையை விக்கிய
என் காதல், பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும் அவள்
சொன்ன காதலை கண்களில்
உணர்ந்தேன் மகனே!!!

ஏக்க பெருமூச்சு, இதயத்துடிப்பை
அதிகரிக்க ஏற்றுக்கொண்ட காதல்
இன்பத்தை தூண்ட, வீடென்ன
வாசலென்ன எதுவும் வேண்டாம்
எனக்கு, நீ மட்டும் போதுமென்று
அவள் கரம்பிடிக்க துடித்த கதை
சொல்கிறேன் மகனே!!!

இலச்சிய காதலோடு நான் சென்ற
பாதையில் முட்செடிகளாக முளைத்து
நின்ற உறவுகளின் கோர பார்வையிலிருந்து
நான் மீள பட்டபாடு என்ன சொல்ல மகனே!!!

மனதை கொடு உயிரை தருகிறேன்
என்று நான் சொல்ல என் உயிரே
நீயென்று அவள் சொல்ல அங்கே
முளைத்தது தைரியம் வேங்கையாய்
நான் மாறி வீரநடை கொண்டு விரைந்தேன்.
அவள் கரம் பிடிக்க முனைந்தேன்
தோல்வியா? மரணமா? எனக்குள்ளே
ஆயிரம் கேள்விகள், அவளுக்காக
நான் எடுத்த முதல்படி இதுதான் மகனே!!!

இல்லாதவன் என்று எதுவும் கேட்கவில்லை
ஏழையென்று ஏளனம் செய்யவில்லை
கரன் நீட்டினேன் அலைபோல அவள்
என்னை நம்பினால் மலைபோல
புறப்பட்ட நேரத்தில் புகையென சூழ்ந்த
உறவுக்கு மத்தியில் என்னை
அவள் காத்தாள் நிழல்போல
வினா ஒன்று கேட்டனர்
விடையொன்று கொடுத்தாள்
இவர் என் உயிரென்று
விலகிய சொந்தங்கள் மத்தியில்
வீறுகொண்டு சென்ற கதையென்ன
உனக்கு சொல்ல மகனே!!!

உண்ண உணவில்லை உடுத்த உடையில்லை
இருக்க இடமில்லை, தெருவில் நின்றேன்
தெருவிளக்கு வெளிச்சத்தில் கைத்தொழில்
கற்றதன் பயனறிந்தேன் பணி செய்ய
முனைந்தேன் என்னை வெளிச்சத்திற்கு
கொண்டு வந்தாள் உன் அன்னை!!!

மாதங்கள் கடந்தன அவளுக்கு நானும்
எனக்கு அவளுமாய் இருந்தோம்
வானில் தோன்றும் விண்மீணாய் நீ
முளைத்தாய் அவள் வயிற்றில்
என் உயிர் சுரத்தில் பத்து திங்களின்
புண்ணியம் நீ என் மகனாக, நீ
என்றும் மறவாதே நான் உன்
தந்தையேன்றல்ல அவள் நம் அன்னையென்று!!!!

நண்பர்களே உங்களின் கருத்துக்களை
பகிரவும் நன்றி!!!!

2 comments: